Mahishasura Mardini Stotram | மஹிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம் Tamil PDF

Download Mahishasura Mardini Stotram Tamil PDF

You can download the Mahishasura Mardini Stotram Tamil PDF for free using the direct download link given at the bottom of this article.

File nameMahishasura Mardini Stotram Tamil PDF
No. of Pages6  
File size104 KB  
Date AddedAug 22, 2022  
CategoryReligion  
LanguageTamil  
Source/CreditsDrive Files        

Mahishasura Mardini Stotram Overview

Mahishasura Mardini Stotram is a popular and devotional scripture.Mahishasura Mardini Stotram is an important part of Bhagavati Padya Pushpanjali Stotra, written by Ramakrishna Kavi. The stotra honors the subduing of Mahisha, the buffalo demon.

The Puranas is primarily written by Guru Adi Sankaracharya. He was one of the most famous and influential Indian Vedic scholars and sages. Mahishasura Mardini Stotram is sung in praise of Goddess Durga and describes the way she destroyed many Rakshasas (Demons).

Mahishasura Mardini Stotram is a prayer to Goddess Durga, written following her victory over the demon Mahishasura. It is dedicated to the Goddess Durga. If you recite this hymn of the Goddess, then all worries of your life will removed.

If you are going through many difficulties in your life then you deserve the best. Reciting Mahishasurmardini Stotra pdf with full devotion may be worth considering.

Generally, we recite the Chandi Patha during Navratri, but it can be time-consuming or difficult for some people, such as those with illnesses. Reciting Mahishasura Mardini Stotram will still provide us the blessing of Goddess Durga.

Lyrics in Tamil:

ஶ்ரீ ப⁴க³வத்யை நம꞉ ..

ப⁴க³வதி ப⁴க³வத்பத³பங்கஜம்ʼ ப்⁴ரமரபூ⁴தஸுராஸுரஸேவிதம் .
ஸுஜனமானஸஹம்ʼஸபரிஸ்துதம்ʼ கமலயா(அ)மலயா நிப்⁴ருʼதம்ʼ ப⁴ஜே .. 1..

தே உபே⁴ அபி⁴வந்தே³(அ)ஹம்ʼ விக்⁴னேஶகுலதை³வதே .
நரநாகா³னனஸ்த்வேகோ நரஸிம்ʼஹ நமோ(அ)ஸ்துதே .. 2..

ஹரிகு³ருபத³பத்³மம்ʼ ஶுத்³த⁴பத்³மே(அ)னுராகா³த்³-
விக³தபரமபா⁴கே³ ஸந்நிதா⁴யாத³ரேண .
தத³னுசரி கரோமி ப்ரீதயே ப⁴க்திபா⁴ஜாம்ʼ
ப⁴க³வதி பத³பத்³மே பத்³யபுஷ்பாஞ்ஜலிம்ʼ தே .. 3..

கேனைதே ரசிதா꞉ குதோ ந நிஹிதா꞉ ஶும்பா⁴த³யோ து³ர்மதா³꞉
கேனைதே தவ பாலிதா இதி ஹி தத் ப்ரஶ்னே கிமாசக்ஷ்மஹே .
ப்³ரஹ்மாத்³யா அபி ஶங்கிதா꞉ ஸ்வவிஷயே யஸ்யா꞉ ப்ரஸாதா³வதி⁴
ப்ரீதா ஸா மஹிஷாஸுரப்ரமதி²னீ ச்சி²ந்த்³யாத³வத்³யானி மே .. 4..

பாது ஶ்ரீஸ்து சதுர்பு⁴ஜா கிமு சதுர்பா³ஹோர்மஹௌஜான்பு⁴ஜான்
த⁴த்தே(அ)ஷ்டாத³ஶதா⁴ ஹி காரணகு³ணா꞉ கார்யே கு³ணாரம்ப⁴கா꞉ .
ஸத்யம்ʼ தி³க்பதித³ந்திஸங்க்²யபு⁴ஜப்⁴ருʼச்ச²ம்பு⁴꞉ ஸ்வய்ம்பூ⁴꞉ ஸ்வயம்ʼ
தா⁴மைகப்ரதிபத்தயே கிமத²வா பாதும்ʼ த³ஶாஷ்டௌ தி³ஶ꞉ .. 5..

ப்ரீத்யா(அ)ஷ்டாத³ஶஸம்ʼமிதேஷு யுக³பத்³த்³வீபேஷு தா³தும்ʼ வரான்
த்ராதும்ʼ வா ப⁴யதோ பி³ப⁴ர்ஷி ப⁴க³வத்யஷ்டாத³ஶைதான் பு⁴ஜான் .
யத்³வா(அ)ஷ்டாத³ஶதா⁴ பு⁴ஜாம்ʼஸ்து பி³ப்⁴ருʼத꞉ காலீ ஸரஸ்வத்யுபே⁴
மீலித்வைகமிஹானயோ꞉ ப்ரத²யிதும்ʼ ஸா த்வம்ʼ ரமே ரக்ஷ மாம் .. 6..

ச²ந்த³꞉ ..

அயி கி³ரினந்தி³னி நந்தி³தமேதி³னி விஶ்வவினோதி³னி நந்த³னுதே
கி³ரிவரவிந்த்⁴யஶிரோதி⁴நிவாஸினி விஷ்ணுவிலாஸினி ஜிஷ்ணுனுதே .
ப⁴க³வதி ஹே ஶிதிகண்ட²குடும்பி³னி பூ⁴ரிகுடும்பி³னி பூ⁴ரிக்ருʼதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³னி ரம்யகபர்தி³னி ஶைலஸுதே .. 1.. .. 7..

ஸுரவரவர்ஷிணி து³ர்த⁴ரத⁴ர்ஷிணி து³ர்முக²மர்ஷிணி ஹர்ஷரதே
த்ரிபு⁴வனபோஷிணி ஶங்கரதோஷிணி கில்பி³ஷமோஷிணி கோ⁴ஷரதே .
த³னுஜநிரோஷிணி தி³திஸுதரோஷிணி து³ர்மத³ஶோஷிணி ஸிந்து⁴ஸுதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³னி ரம்யகபர்தி³னி ஶைலஸுதே .. 2.. .. 8..

அயி ஜக³த³ம்ப³ மத³ம்ப³ கத³ம்ப³வனப்ரியவாஸினி ஹாஸரதே
ஶிக²ரிஶிரோமணிதுங்க³ஹிமாலயஶ்ருʼங்க³நிஜாலயமத்⁴யக³தே .
மது⁴மது⁴ரே மது⁴கைடப⁴க³ஞ்ஜினி கைடப⁴ப⁴ஞ்ஜினி ராஸரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³னி ரம்யகபர்தி³னி ஶைலஸுதே .. 3.. .. 9..

அயி ஶதக²ண்ட³விக²ண்டி³தருண்ட³விதுண்டி³தஶுண்ட³க³ஜாதி⁴பதே
ரிபுக³ஜக³ண்ட³விதா³ரணசண்ட³பராக்ரமஶுண்ட³ ம்ருʼகா³தி⁴பதே .
நிஜபு⁴ஜத³ண்ட³நிபாதிதக²ண்ட³விபாதிதமுண்ட³ப⁴டாதி⁴பதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³னி ரம்யகபர்தி³னி ஶைலஸுதே .. 4.. .. 10..

அயி ரணது³ர்மத³ஶத்ருவதோ⁴தி³தது³ர்த⁴ரநிர்ஜரஶக்திப்⁴ருʼதே
சதுரவிசாரது⁴ரீணமஹாஶிவதூ³தக்ருʼதப்ரமதா²தி⁴பதே .
து³ரிதது³ரீஹது³ராஶயது³ர்மதிதா³னவதூ³தக்ருʼதாந்தமதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³னி ரம்யகபர்தி³னி ஶைலஸுதே .. 5.. .. 11..

அயி ஶரணாக³தவைரிவதூ⁴வரவீரவராப⁴யதா³யகரே
த்ரிபு⁴வநமஸ்தகஶூலவிரோதி⁴ஶிரோதி⁴க்ருʼதாமலஶூலகரே .
து³மிது³மிதாமரது³ந்து³பி⁴நாத³மஹோமுக²ரீக்ருʼததிக்³மகரே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³னி ரம்யகபர்தி³னி ஶைலஸுதே .. 6.. .. 12..

அயி நிஜஹும்ˮக்ருʼதிமாத்ரநிராக்ருʼததூ⁴ம்ரவிலோசனதூ⁴ம்ரஶதே
ஸமரவிஶோஷிதஶோணிதபீ³ஜஸமுத்³ப⁴வஶோணிதபீ³ஜலதே .
ஶிவஶிவ ஶும்ப⁴நிஶும்ப⁴மஹாஹவதர்பிதபூ⁴தபிஶாசரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³னி ரம்யகபர்தி³னி ஶைலஸுதே .. 7.. .. 13..

த⁴னுரனுஸங்க³ரணக்ஷணஸங்க³பரிஸ்பு²ரத³ங்க³னடத்கடகே
கனகபிஶங்க³ப்ருʼஷத்கநிஷங்க³ரஸத்³ப⁴டஶ்ருʼங்க³ஹதாவடுகே .
க்ருʼதசதுரங்க³ப³லக்ஷிதிரங்க³க⁴டத்³ப³ஹுரங்க³ரடத்³ப³டுகே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³னி ரம்யகபர்தி³னி ஶைலஸுதே .. 8…. 14..

ஸுரலலனாதததே²யிததே²யிததா²பி⁴னயோத்தரந்ருʼத்யரதே
ஹாஸவிலாஸஹுலாஸமயி ப்ரணதார்தஜனே(அ)மிதப்ரேமப⁴ரே .
தி⁴மிகிடதி⁴க்கடதி⁴கடதி⁴மித்⁴வனிகோ⁴ரம்ருʼத³ங்க³னிநாத³ரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³னி ரம்யகபர்தி³னி ஶைலஸுதே .. 9.. .. 15..

ஜய ஜய ஜப்யஜயே ஜயஶப்³த³பரஸ்துதிதத்பரவிஶ்வனுதே
ஜ²ணஜ²ணஜி²ஞ்ஜி²மிஜி²ங்க்ருʼதநூபுரஸிஞ்ஜிதமோஹிதபூ⁴தபதே .
நடிதனடார்த⁴நடீனடநாயகனாடிதநாட்யஸுகா³னரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³னி ரம்யகபர்தி³னி ஶைலஸுதே .. 10.. .. 16..

அயி ஸுமன꞉ஸுமன꞉ ஸுமன꞉ ஸுமன꞉ ஸுமனோஹரகாந்தியுதே
ஶ்ரிதரஜநீரஜநீரஜநீரஜநீரஜனீகரவக்த்ரவ்ருʼதே .
ஸுநயனவிப்⁴ரமரப்⁴ரமரப்⁴ரமரப்⁴ரமரப்⁴ரமராதி⁴பதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³னி ரம்யகபர்தி³னி ஶைலஸுதே .. 11.. .. 17..

ஸஹிதமஹாஹவமல்லமதல்லிகமல்லிதரல்லகமல்லரதே
விரசிதவல்லிகபல்லிகமல்லிகஜி²ல்லிகபி⁴ல்லிகவர்க³வ்ருʼதே .
ஸிதக்ருʼதபு²ல்லிஸமுல்லஸிதாருணதல்லஜபல்லவஸல்லலிதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³னி ரம்யகபர்தி³னி ஶைலஸுதே .. 12.. .. 18..

அவிரலக³ண்ட³க³லன்மத³மேது³ரமத்தமதங்க³ஜராஜபதே
த்ரிபு⁴வனபூ⁴ஷணபூ⁴தகலாநிதி⁴ரூபபயோநிதி⁴ராஜஸுதே .
அயி ஸுத³தீ ஜனலாலஸமானஸமோஹனமன்மத²ராஜஸுதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³னி ரம்யகபர்தி³னி ஶைலஸுதே .. 13.. .. 19..

கமலத³லாமலகோமலகாந்திகலாகலிதாமலபா⁴லலதே
ஸகலவிலாஸகலாநிலயக்ரமகேலிசலத்கலஹம்ʼஸகுலே .
அலிகுலஸங்குலகுவலயமண்ட³லமௌலிமிலத்³ப⁴குலாலிகுலே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³னி ரம்யகபர்தி³னி ஶைலஸுதே .. 14.. .. 20..

கரமுரலீரவவீஜிதகூஜிதலஜ்ஜிதகோகிலமஞ்ஜுமதே
மிலிதபுலிந்த³மனோஹரகு³ஞ்ஜிதரஞ்ஜிதஶைலநிகுஞ்ஜக³தே .
நிஜகு³ணபூ⁴தமஹாஶப³ரீக³ணஸத்³கு³ணஸம்ப்⁴ருʼதகேலிதலே
variation நிஜக³ணபூ⁴தமஹாஶப³ரீக³ணரங்க³ணஸம்ப்⁴ருʼதகேலிரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³னி ரம்யகபர்தி³னி ஶைலஸுதே .. 15.. .. 21..

கடிதடபீதது³கூலவிசித்ரமயூக²திரஸ்க்ருʼதசந்த்³ரருசே
ப்ரணதஸுராஸுரமௌலிமணிஸ்பு²ரத³ம்ʼஶுலஸந்நக²சந்த்³ரருசே .
ஜிதகனகாசலமௌலிபதோ³ர்ஜிதநிர்ஜ²ரகுஞ்ஜரகும்ப⁴குசே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³னி ரம்யகபர்தி³னி ஶைலஸுதே .. 16.. .. 22..

விஜிதஸஹஸ்ரகரைகஸஹஸ்ரகரைகஸஹஸ்ரகரைகனுதே
க்ருʼதஸுரதாரகஸங்க³ரதாரகஸங்க³ரதாரகஸூனுஸுதே .
ஸுரத²ஸமாதி⁴ஸமானஸமாதி⁴ஸமாதி⁴ஸமாதி⁴ஸுஜாதரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³னி ரம்யகபர்தி³னி ஶைலஸுதே .. 17.. .. 23..

பத³கமலம்ʼ கருணாநிலயே வரிவஸ்யதி யோ(அ)னுதி³னம்ʼ ஸ ஶிவே
அயி கமலே கமலாநிலயே கமலாநிலய꞉ ஸ கத²ம்ʼ ந ப⁴வேத் .
தவ பத³மேவ பரம்பத³மேவமனுஶீலயதோ மம கிம்ʼ ந ஶிவே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³னி ரம்யகபர்தி³னி ஶைலஸுதே .. 18.. .. 24..

கனகலஸத்கலஸிந்து⁴ஜலைரனுஸிஞ்சினுதே கு³ண ரங்க³பு⁴வம்ʼ
ப⁴ஜதி ஸ கிம்ʼ ந ஶசீகுசகும்ப⁴தடீபரிரம்ப⁴ஸுகா²னுப⁴வம் .
தவ சரணம்ʼ ஶரணம்ʼ கரவாணி நதாமரவாணிநிவாஸி ஶிவம்ʼ
variation ம்ருʼடா³னி ஸதா³ மயி தே³ஹி ஶிவம்ʼ
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³னி ரம்யகபர்தி³னி ஶைலஸுதே .. 19.. .. 25..

தவ விமலேந்து³குலம்ʼ வத³னேந்து³மலம்ʼ ஸகலம்ʼ நனு கூலயதே
கிமு புருஹூதபுரீந்து³முகீ²ஸுமுகீ²பி⁴ரஸௌ விமுகீ²க்ரியதே .
மம து மதம்ʼ ஶிவநாமத⁴னே ப⁴வதீ க்ருʼபயா கிமுத க்ரியதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³னி ரம்யகபர்தி³னி ஶைலஸுதே .. 20.. .. 26..

அயி மயி தீ³னத³யாலுதயா க்ருʼபயைவ த்வயா ப⁴விதவ்யமுமே
அயி ஜக³தோ ஜனனீ க்ருʼபயாஸி யதா²ஸி ததா²(அ)னுமிதாஸி ரதே .
யது³சிதமத்ர ப⁴வத்யுரரீகுருதாது³ருதாபமபாகுருதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³னி ரம்யகபர்தி³னி ஶைலஸுதே .. 21.. .. 27..

ஸ்துதிமிதஸ்திமித꞉ ஸுஸமாதி⁴னா நியமதோ(அ)யமதோ(அ)னுதி³னம்ʼ படே²த் .
பரமயா ரமயாபி நிஷேவ்யதே பரிஜனோ(அ)ரிஜனோ(அ)பி ச தம்ʼ ப⁴ஜேத் .. 28..

ரமயதி கில கர்ஷஸ்தேஷு சித்தம்ʼ நராணாமவரஜவரயஸ்மாத்³ராமக்ருʼஷ்ண꞉ கவீனாம் .
அக்ருʼத ஸுக்ருʼதிக³ம்யம்ʼ ரம்யபத்³யைகஹர்ம்யம்ʼ ஸ்தவனமவனஹேதும்ʼ ப்ரீதயே விஶ்வமாது꞉ .. 29..

இந்து³ரம்யோ முஹுர்பி³ந்து³ரம்யோ முஹுர்பி³ந்து³ரம்யோ யத꞉ ஸா(அ)னவத்³யம்ʼ ஸ்ம்ருʼத꞉ .
ஶ்ரீபதே꞉ ஸூனூனா காரிதோ யோ(அ)து⁴னா விஶ்வமாது꞉ பதே³ பத்³யபுஷ்பாஞ்ஜலி꞉ .. 30..

Meaning:

  1. மலையரசனின் மகளே, உலகை மகிழ்விப்பவளே, விளையாட்டாக உலகை நடத்திச் செல்பவளே, நந்தனால் வழிபடப்பட்டவளே, சிறந்த மலையான விந்திய மலையில் உறைபவளே, திருமாலுக்குப் பெருமை சேர்ப்பவளே, வெற்றி வீரர்களால் துதிக்கப்படுபவளே, பகவதீ, நீலகண்டரின் பத்தினியே, உலகமாகிய பெரிய குடும்பத்தை உடையவளே, அரியவற்றைச் சாதிப்பவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.
  2.  நல்லோருக்கு வரங்களை மழைபோல் பொழிபவளே. கொடியவர்களை அடக்கி வைப்பவளே, கடுமையான வார்த்தைகளையும் பொறுப்பவளே, மகிழ்ச்சியுடன் பொலிபவளே, மூன்று உலகங்களுக்கும் உணவளித்துக் காப்பவளே, சிவபெருமானை மகிழ்விப்பவளே, பாவங்களைப் போக்குபவளே, பேரொலியில் மகிழ்பவளே, தீயவர்களிடம் கோபம் கொள்பவளே, கொடியவர்களை அடக்குபவளே, அலை மகளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.
  3. உலகின் அன்னையே, என் தாயே, கதம்ப வனத்தில் வசிப்பதை விரும்புபவளே, சிரிப்பில் மகிழ்பவளே, மலைகளில் சிறந்த இமயமலையில் உச்சியிலுள்ள ஸ்ரீசக்கரத்தின் நடுவில் வீற்றிருப்பவளே, தேன்போல் இனியவளே, மது கைடப அசுரர்களை அழித்தவளே, கேளிக்கைகளில் மகிழ்பவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.
  4. சதகண்டம் என்ற ஆயுதத்தால் முண்டாசுரனை வீழ்த்தியவளே, யானை முகத்தினனான கஜாசுரனின் தும்பிக்கையைத் துண்டித்தவளே, எதிரிகளான யானைகளின் கழுத்தைத் துண்டித்து எறிவதில் திறமை மிக்கவளே, தண்டாயுதம் போன்ற தன் தோள்களின் வலிமையால் முண்டாசுரனின் சேனாதிபதியைக் கண்டதுண்டமாக வெட்டியெறிந்தவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.
  5. அருவிபோல் எதிரிகளின் பிணக் குவியலைப் பொழிகின்ற ஆற்றல் பெற்றவளே, பகுத்து ஆராய்வதில் வல்லவரான சிவபெருமானை எதிரிகளிடம் தூதாக அனுப்பியவளே, தீய சிந்தனையும் கெட்ட நோக்கமும் கொண்ட அசுரர்களை அழிப்பவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.
  6. தஞ்சம் அடைந்த எதிரிகளின் மனைவியருக்கும் சரணடைந்த வீரர்களுக்கும் அடைக்கலம் தந்து காத்தவளே, மூன்று உலகங்களுக்கும் தலைவியாக விளங்குபவளே, எதிரிகளின் கழுத்தில் திரிசூலத்தை நாட்டியவளே, தும் தும் என்று முழங்குகின்ற துந்துபி வாத்தியத்தையே வெட்கப்படச் செங்கின்ற கம்பீரக் குரல் படைத்தவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.
  7. தூம்ரவிலோசனன் முதலிய நூற்றுக்கணக்கான அசுரர்களை ஹூங்காரத்தினாலேயே தோற்று ஓடச்செய்தவளே, போரில் மாண்ட அசுரர்களின் ரத்தக்கடலில் தோன்றிய அழகிய சிவந்த கொடி போன்றவளே, சும்ப நிசும்ப அசுரர்களை அழித்ததாகிய மாபெரும் வேள்வியால் பூதகணங்களை மகிழ்வுறச் செய்தவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.
  8. வில்லை வளைத்துப் போர் செய்வதால் நடனமாடுவது போல் அசைகின்ற கைவளைகளை அணிந்தவளே, பொன் அம்புகளில் ஒரு கையும் அம்பறாத்தூணியில் மற்றொறு கையுமாக விரைந்து அம்புகளைப் பொழிந்து, ஒலி எழுப்புகின்ற வீரர்களைக் கொன்றவளே, நால்வகை சேனைகளும் நிறைந்த போர்க்களத்தில் வெட்டப்பட்ட தலைகளைச் சதுரங்கக் காய்களைப்போல் விளையாடுபவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.
  9.  பகைவர்களால் வெல்ல முடியாதவளே, ஜெய ஜெய என்ற கோஷத்துடன் உலகினரால் போற்றப்படுபவளே, ஜண ஜண என்று ஒலித்து சிவபெருமானை மோகத்தில் ஆழ்த்துகின்ற கொலுசுகளை அணிந்தவளே, நடனம், நாட்டியம், நாடகம், பாடல்கள் என்று விதவிதமான கேளிக்கைகளில் ஆர்வம் உடையவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.
  10. நல்மனம் படைத்த தேவர்களின் அழகிய சோலையில் மலர்ந்த பாரிஜாத மலர்களைப்போல் பிரகாசிப்பவளே, பாற்கடலில் பிறந்து இரவில் ஒளிரக்கூடிய நிலவை ஒத்த முகம் உடையவளே, பார்த்தவர் வியந்து நிற்கும் வண்ணம் சுழல்கின்ற அழகிய விழிகளைப் பெற்றவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.
  11. மற்போரில் பல்வேறு திறமைகள் காட்டுகின்ற மாமல்லர்களுடன் மற்போர் செய்வதை விரும்புபவளே, மல்லிகை, முல்லை, பிச்சி போன்ற பல்வேறு மலர்களைச் சூடிய பெண்களால் சூழப்பட்டவளே, தளிரின் இளஞ்சிவப்பும் வெட்கப்படுகின்ற சிவப்பு நிறம் கொண்டவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.
  12.  ஓயாமல் மதநீரைப் பெருக்குகின்ற யானையின் இன்பநடையை ஒத்த நடை உடையவளே, மூன்று உலகங்களுக்கும் ஆபரணமான நிலவை ஒத்தவளே, பாற்கடலாகிய அரசனுக்குப் பிறந்தவளே, அழகிய பெண்களின் மனத்தில்கூட மோகத்தையும் ஆசையையும் தூண்டுகின்ற அழகுவாய்ந்த இளவரசியே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.
  13.  தாமரை இதழ்போன்ற மென்மையும் அழகும் வாய்ந்த பரந்த நெற்றியை உடையவளே, எல்லா கலைகளின் இருப்பிடமும் நீயே என்பதை உணர்த்துகின்ற அன்னநடை உடையவளே, தாமரை மலர்களை வண்டுகள் சூழ்வதுபோல், வண்டுகள் சூழ்ந்து மொய்க்கின்ற வகுள மலர்களைத் தலையில் சூடியவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.
  14. உன் கையிலுள்ள புல்லாங்குழல் வெட்கப்படுகின்ற அளவுக்கு குயில்போல் இனிய குரல் படைத்தவளே, மலைவாசிகள் பாடி மகிழ்ந்து திரிகின்ற மலைகளில் மகிழ்ச்சியுடன் உறைபவளே, நற்குணங்கள் அனைத்தும் சேர்ந்து ஓர் உருவம் பெற்றதுபோல் வேட்டுவப் பெண்களின் கூட்டத்தில் சிறந்து விளங்குபவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.
  15. நிலவின் தண்ணொளியைக்கூட தோற்கச் செய்கின்ற அழகிய கிரணங்கள் பிரகாசிக்கின்ற பட்டாடையை இடுப்பில் அணிந்தவளே, உன் திருவடிகளைப் பணிகின்ற தேவர் மற்றும் அசுரர்களின் கிரீடங்களில் பதிக்கப்பட்ட மாணிக்கக் கற்களைப் பிரதிபலிக்கச் செய்கின்ற நிலவொளி போன்ற ஒளியை வீசுகின்ற நகங்களை உடையவளே, யானையின் மத்தகத்தைப் போன்றதும், அழகில் பொன்மலையான மேருவை நிகர்த்ததுமான மார்பகங்களை உடையவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.
  16. உன்னால் வெல்லப்பட்ட கோடி சூரியர்களால் துதிக்கப்படுபவளே, தேவர்களைப் பாதுகாக்கவும் தேவ-அசுரப் போரை முடிவிற்கு கொண்டு வரவும் முருகப்பெருமானை மகனாகப் பெற்றவளே, சுரதன், சமாதி ஆகியோரின் உயர்ந்த நிலைகளைப்போல் உயர்நிலைகளை நாடுபவர்களிடம் ஆர்வமும் அக்கறையும் உடையவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.
  17. கருணையின் இருப்பிடமே! தினமும் உன் திருவடித் தாமரைகளை வணங்குபவர்களின் இதயத் தாமரையை உறைவிடமாகக் கொள்கின்ற மகாலட்சுமியே! நீ அடியவர்களின் நெஞ்சில் வாழ்ந்தால் அவர்களே திருமால் ஆகிவிட மாட்டார்களா? உனது திருப்பாதங்களே மிக உயர்ந்த செல்வம் என்று கருதுகின்ற எனக்கு அதைவிட வேறு செல்வம் வேண்டுமா? மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.
  18. பொன்போல் பிரகாசிக்கின்ற சிந்து நதியின் நீரினால் பக்தர்கள் உன்னை நீராட்டுகின்றனர். அவர்கள், தேவர்களின் தலைவியான இந்திராணியின் மார்பகங்களைப் போன்ற பெரிய மார்பகங்களை உடைய பெண்கள் தழுவுகின்ற சுகத்தைப் பெறமாட்டார்களா என்ன? அந்த சுகத்தைப் பெரிதென்று கருதாமல் உன்னையே நான் தஞ்சமடைந்துள்ளேன். என் நாவில் கலைமகளை எழுந்தருளச் செய்வாய். மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.
  19. எல்லா முகங்களையும் மலரச் செய்வதற்கு நிலவை ஒத்த உன் முகம் போதும். தேவலோகப் பெண்கள் உன்னை விடுத்து ஏன்தான் நிலவை நாடுகிறார்களோ? அதுவும் உன் செயல்தான் என்பது எனக்குத் தெரியும். சிவை என்ற பெயர் பெற்றவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.
  20. அம்மா! உமையே! கதியற்ற என்னைக் கருணையுடன் காக்க வேண்டும். எல்லையற்ற கருணையால் நீ இந்த உலகிற்கெல்லாம் தாயாக விளங்குகிறாய். எது சரியானது என்று உனக்குப் படுகிறதோ அதைச் செய். என் மன ஏக்கத்தை அதுவே போக்கும். மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை டையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

Benefits:

  1. மகிஷாசுர மர்தினி ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்வதால் வீட்டிற்கு அமைதியும், மகிழ்ச்சியும், செழிப்பும் உண்டாகும்.
  2. சக்தி வேண்டுமானால், துர்கா தேவியை வணங்கி, இந்த ஸ்தோத்திரத்தை பயபக்தியுடன் பாராயணம் செய்யுங்கள்.
  3. துர்கா தேவியை வழிபடுவதால், துர்கா ஜியின் அருளால் நீங்கள் அனுபவிக்கும் எந்த பெரிய பிரச்சனையும் தானாகவே நீங்கும்.
  4. நீங்கள் துர்காவை வழிபட பல வழிகள் உள்ளன, ஆனால் மகிஷாசுர மர்தினி ஸ்தோத்திரத்தை படிப்பது சிறந்த ஒன்றாக இருக்கலாம்.
  5. மா மகிஷாசுர்மர்தினி ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்பவருக்கு எந்த நெருக்கடியும் வராது என்று வேதத்தில் கூறப்பட்டுள்ளது.
Mahishasura Mardini Stotram Tamil PDF

Mahishasura Mardini Stotram Tamil PDF Download Link

Leave a Comment