Download பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் கட்டுரை PDF
You can download the பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் கட்டுரை PDF for free using the direct download link given at the bottom of this article.
File name | பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் கட்டுரை PDF |
No. of Pages | 404 |
File size | 23.1 MB |
Date Added | Nov 24, 2022 |
Category | Education |
Language | Tamil |
Source/Credits | Drive Files |
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் Overview
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்”
எல்லா மக்களுயிர்க்கும் பிறப்பியல்பு சமமானதே; தொழில் வேறுபாட்டால் பெருமை சிறுமை என்னும் சிறப்பியல்புகள் தாம் ஒரு போதும் ஒத்திருப்பதில்லை
பிறப்பால் அனைவரும் ஒத்த தன்மை உடையவரே ஆவர். எனினும் அவர்கள் செய்யும் தொழிலின் வேறுபாடு காரணமாக கிடைக்கும் சிறப்பு அனைவருக்கும் ஒத்திருப்பதில்லை.
விளக்கம் :
பிறப்பால் அனைவரும் சமமானவர்களாகவே கருதப்படுகின்றனர். அதாவது பிறப்பில் எவருக்கும் உயர்வோ தாழ்வோ கிடையாது. அனைவரும் சமம்.ஒருவரை இந்தச் சமூகம் உயர் குடியில் பிறந்தவர் என்று சொல்லிக்கொள்ளலாம்.இன்னொருவர் தாழ்ந்த குடியில் பிறந்தவர் என்று பிரித்து வைத்திருக்கலாம்.
இந்த பாகுபாடானது இந்தச் சமூகம் அவர்களுக்குக் கொடுத்ததே தவிர உண்மையில் அவர்களுக்குள் எந்தவொரு வேறுபாடும் கிடையாது. உயர்வும் இல்லை. தாழ்வும் இல்லை.ஆதலால் ஒருவர் பிறப்பால் உயர்ந்தவர்.இன்னொருவர் பிறப்பால் தாழ்ந்தவர் என்ற எண்ணமே வேண்டாம்.
உயர்வென்பதும் தாழ்வென்பதும் பிறப்பால் வருவதல்ல. நாம் செய்யும் தொழிலில் உள்ள வேறுபாடு காரணமாக பெறும் சிறப்பினை வைத்தே ஒருவர் வேறுபடுத்தப்படுகிறார். சிறப்பிக்கப்படுகிறார்.
ஒருவர் செய்யும் தொழில், அதனால் அவருக்குக் கிடைக்கும்
சிறப்பு ,மரியாதை,பெருமை இவற்றில் மட்டுமே ஒருவருக்கொருவர் வேறுபாடு இருக்க முடியும்.செய்யும் தொழில்தான் ஒருவரைப் பெருமைக்குரியவராகவும்
இன்னொருவரை சிறப்பில்லாதவராகவும் வேறுபடுத்திக் காட்டுகிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
அதனால்தான் வள்ளுவர்,”செய்யும் தொழில் மட்டுமே ஒருவரைப் சிறப்பாகவும் இன்னொருவரை சிறப்பில்லாதவராகவும் வேறுபடுத்திக் காட்டும். பிறப்பால் ஒருவன் உயர்குடி பிறந்தவன் இன்னொருவன் தாழ்ந்த குடியில் பிறந்தவன் என்று யாரும் எண்ணிவிட வேண்டாம். பிறப்பால் அனைவரும் சமம் “என்று உறுதிபடக் கூறுகிறார்.

Leave a Reply